Saturday, 17 May 2014

யார் அந்த நிலவு - சாந்தி (1965)



யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
படம்: சாந்தி (1965)
பாடல்: யார் அந்த நிலவு
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.இராமமூர்த்தி
வரிகள் : கவியரசர் கண்ணதாசன்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

ஆடிய நாடகம் முடியவில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு..
நான் வந்த வரவு..

No comments:

Post a Comment