அற்றைத் திங்கள் வானிடம்
படம் : சிவப்பதிகாரம் (2006)
படம் : சிவப்பதிகாரம் (2006)
பாடியவர் : மதுபாலகிருஷ்ணன, சுஜாதா
பாடலாசிரியர் : யுகபாரதி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
அற்றைத் திங்கள் வானிடம்
அல்லிச் சென்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
அற்றைத் திங்கள் வானிடம்
அல்லிச் சென்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
அடிதொட முடிதொட ஆசைப் பெருகிட நேரும் பலவித பரிபாஷை
பொடி பட பொடி பட நாணம் பொடி பட
கேட்கும் மனதினில் உயிரோசை
முடி தொட முகம் தொட மோகம் மூழ்கிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது குளிர் வீசும்
குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
அற்றை திங்கள் வானிடம்
அல்லி சென்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடும்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
உடல் எது உடை எது தேடும் நிலை இது காதல் கடனிது அடையாது
இரவெது பகலேது தேங்கும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது காமப்பசி வரை அடங்காது
வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விளங்காது
நடுங்கலாம் குளிர் வாடையில் அடங்கலாம் உனது ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
No comments:
Post a Comment