Saturday, 17 May 2014

மலரே மௌனமா மௌனமே வேதமா - கர்ணா (1995)



மலரே மௌனமா மௌனமே வேதமா
படம் : கர்ணா (1995)
பாடியவர்கள் : எஸ்.பி,பாலசுப்பிரமணியம் - எஸ்.ஜானகி
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர்:  கவிஞர் வாலி

மலரே மௌனமா
மௌனமே வேதமா?

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா? அன்பே

மலரே மௌனமா
மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? அ..ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ? ஓ..ஓ..
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா?

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா
மௌனமே வேதமா?

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா? அன்பே

மலரே ம்.. மௌனமா? ம்ம்..
மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ

No comments:

Post a Comment